ஓமன் பதிவுகளை படித்து பிடித்து போயி நண்பர் வட்டத்துக்குள் வந்த அகஸ்டின், பாவூர்சத்திரம் பகுதியை சார்ந்தவர். விவசாயி மற்றும் தமிழ் ஆசிரியர் !! எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுபவர் . ஓமன் குறித்த மேலும் தகவல் தெரிய தொடர்பு எல்லைக்கு அருகில் வந்தவர், மிகவும் நெருக்கமான நண்பராகி போனார் !!
கடந்த முறை ஊருக்கு வந்த பொழுது நேரில் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை வரும்போது கண்டிப்பா சந்திக்கணும் ப்ரோன்னு சொல்லிட்டே தான் இருந்தார் !!!
முகப்புத்தக நட்பு , முகம் பார்க்கும் நட்பாக மாற்றப் போகும் அந்த குறுஞ்செய்தி தான் அது !!!
தல !! இன்னைக்கு நைட் 7 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட வைத்து சந்திக்கலாமா ?? என அகஸ்டினமிருத்து ஒரு புலனச் செய்தி !!!
ஏதோ சொந்த வேலை காரணமாக திருநெல்வேலி வருகிறவர் , நம்மை சந்திக்க விரும்புகிறார் போலன்னு நினைச்சிட்டு , ஒகே ப்ரோ கண்டிப்பா சந்திக்கலாம்னு சொல்லிட்டேன் !!!
ப்ரோ வரும்போது ஒரு ஷாப்பர் ( கட்டப்பை ) கொண்டு வாங்கன்னு சொன்னார். ஏன் எதுக்குன்னு தெரியல !! ஒருவேளை அவரோட கைப்பை அறுந்திருக்கும்னு நினைச்சிட்டு , அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன் !!!
சரியாக 7.30 மணிக்கு ஒரு மெசேஜ் !! தல வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்க !! அதனால ஒரு அரைமணி நேரம் லேட் ஆயிட்டு !! இப்போதான் பஸ் ஏறுறேன்.. ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன்னு சொன்னதும் தான் , இவர் நம்மை சந்திக்க மட்டும் திருநெல்வேலி வருகிறார் என தெரிகிறது !!!
எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமும் அன்பும் காரணமாக முதல் முறையாக நம்மை சந்திக்க ஒருவர் வருகிறார். இதனை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் நாம் தகுதியான்னு தெரியவில்லை !!! ஆனாலும் மனசுக்குள் ஒரு வகையான இனம்புரியாத சந்தோசம்...
அக்கா பையனை கூட்டிட்டு சுமார் 8.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டேன். ஐந்து நிமிடத்தில் அகஸ்டினும் வந்து விட்டார்.
ஏதோ வெகு நாட்களாக பழகியவர்கள் போல சுமார் அரை மணிநேரம் பேசிவிட்டு , பின்னர் சுமந்து வந்த தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அன்பளிப்பை தந்தார்.
வெங்காயம் , தக்காளி , சீனி அவரைக்காய், பூசணிக்காய் , மிளகாய், நிலக்கடலை , தேங்காய் கூடவே அகஸ்டினும் சேர்ந்து நம்மை வாயடைக்க செய்து விட்டார்கள் !!!
அன்பு பரிமாற்றம் மூலமாக காய்கறிக்கு பகரமாக நாங்கள் வாங்கிட்டு போன முகைதீன் ஸ்டோர் ஹல்வா பாவூர்சத்திரத்திற்கு பயணப்பட தயாராகி விட்டது.
வாழ்வில் முகம் தெரியாமல் பேசும் அனைவரையும் நாம் நேரில் சந்திக்க சிந்திப்பது இல்லை !! எழுத்தே எங்கள் இருவரையும் சந்திக்க வைத்துள்ளது..
இது போன்ற நல் உள்ளங்களை சந்திக்க வைத்தது என்னுயிர் தமிழல்லவோ !!!
ஒருவேளை வைரமுத்து நம் அருகில் நின்றிருந்தால் கண்டிப்பாக இப்படி சொல்லியிருப்பார்,
இந்த காய்கறிகளுக்கு அளவும் உண்டு !! விலையும் உண்டு !! இந்த அன்பிற்கு விலையுமில்லை.. அளவுமில்லை !!!
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது !! நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது என்பது போல காய்கறிகளை புகைப்படத்திற்குள் உறைய செய்கையில் வண்ணங்களோடு நேசமும் ஜொலிக்கிறது !!
இந்த உலகில் அன்புக்கு விலை அன்பு மட்டுமே !!!!
அன்புக்கும் அன்பளிப்புக்கும் மிக்க நன்றி அன்புடன் அகஸ்டின்
கடந்த வருடத்தின் அழகிய மீள் ❤️💚
அபு பர்ஹானா



0 கருத்துகள்