Header

google.com, pub-9842646650003123, DIRECT, f08c47fec0942fa0

சமையல்

 


தேங்காய் பால் சாதம்,சிக்கன் குழம்பு இதுதான் இன்றைய சமையல் 

 தேங்காய் பால் சாதம் செய்யலாம்னு முடிவெடுத்து தேங்காய் பால் எடுத்து வச்சிட்டு பார்க்கிறேன் சீரக சம்பா குருணை ரொம்ப கம்மியா இருக்கு. ஒரிஜினல் சீரக சம்பா குருணை ஒரு சில கடைகள்ல மட்டும்தான் கிடைக்குது. மத்த இடங்கள்ல பொன்னிபச்சரிசி குருணையை சீரக சம்பா குருணைன்னு சொல்லி குடுத்து விடுறாங்க. இந்த சீரக சம்பா குருணையை கையில வச்சு முகர்ந்து பார்த்தாலே பிரியாணியோட வாசமா இருக்கும். இருக்கிற அரிசி ரெண்டு வேளை சாப்பாடுக்கு எங்களுக்கு ரொம்ப தாராளம்தான். ஆனா பிள்ளைகள் இந்த மாதிரி பிரியாணி செய்தால் இன்னொரு டிபன் வச்சு விடுங்கன்னு சொல்லுவாங்க இன்னைக்கு அப்படி கொடுக்க முடியல டிபன்ல நல்லா அமுக்கி அமுக்கி நிறையவே வைத்துவிட்டு இருக்கேன்.

 தேங்காய்ப்பால் நிறைய எடுத்து அரிசி கொஞ்சம் போடட பிரியாணியோட டேஸ்ட்டே செம்மையா இருந்துச்சு.

 சிக்கன் கிரேவியா தான் வைக்கணும்னு நினைச்சேன். கிரேவி கட்டியாகறதுக்குள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு நேரம் லேட்டாயிடும்னு குழம்பாவே வச்சாச்சு. மீத குழம்பு இருந்தா நைட்டுக்கு தோசைக்கு தொட்டு சாப்டுக்கலாம்.


இன்னைக்கு தேங்காய் பால் சாதம் சாப்பிடும்போது என்னோட மனசுகுள்ள நினைப்பு தோணுச்சு. நம்ம ஒரு பிரியாணி கடை வச்சா என்ன இவ்வளவு டேஸ்டா செய்கிறோம் எந்த கடையிலையும் இப்படி வச்சு தர மாட்டாங்க நினைப்பு ஓடுச்சு.

 சுட சுட சாப்பிடும் போது அப்படி ஒரு டேஸ்ட் அய்யோ இன்னைக்கு பாத்து கொஞ்சமா செஞ்சுட்டோமே அப்படின்னு தோணுது.

 வாங்க சாப்பிடலாம்

#fblifestyle #foodlover #food #foodblogger #foodie

கருத்துரையிடுக

0 கருத்துகள்