Covid-19

 Covid-19 ஆல் மனநோய்


கொவிட்டால் நாட்டில் மனநோய்கள் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.அதுவும் அரசபணியிடங்களில்த்தான் இதன் தாக்கம் அதிகம்.




பஸ்ஸில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து பாடசாலைநுழைவாயில் வரை கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவரும் பிள்ளைகளை வகுப்பில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள்.40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் சாதாரணமாகவே காத்துப்போகக்கூட இடைவெளி கிடையாது இதில எங்க சமூக இடைவெளி சாத்தியம்?எண்டு வகுப்பறைய எட்டிப்பார்த்தியல் எண்டா எங்கட வருங்காலத்தலைவர்கள் 10 cm க்கும் குறைவான இடைவெளியில் மேசைகளை அடுக்கி இருக்கிக்கினம்.


இரண்டாவது விசயம் மாஸ்க் இதைப்பற்றி எழுதவேணும் எண்டால் ஒரு பெரிய காவியமே எழுதலாம்.

முதலாவது தோய்க்கிறானுகள் இல்லை சவத்தை புணநாத்தம் அடிக்கிது ,உந்த நாத்தத்திலயே கொரோணாவே செத்திடும்போல.

அடுத்து சும்மா இருக்கும் போது மாஸ்க்க வடிவா போட்டிருக்கிறானுகள் கதைக்கத்தொடங்கும் போது தான் இறக்கிவிட்டிட்டுக் கதைக்கிறானுகள்.ஸ்ஸ்ஸப்பா இந்த அறியாச்சிறுவர்களுக்கு ஒரு முட்டை சைசிலாவது அறிவுகுடும் ஆண்டவரே.


முழுக்கோழி பிரியாணி திண்டுமுடிச்சு ஏப்பம் விடுற நேரம் திடீரெண்டு "இண்டைக்கு வெள்ளிக்கிழமை" எண்டு ஞாபகம் வந்தால் என்ன பிரியோசனம்? அதுபோலத்தான்

தியோட்டரை துறக்குறானுகள் ஆனால் ஒரு கதிரை இடைவெளிவிட்டுத்தான் இருக்கோனுமாம்.அதாவது சோடி சோடியா பைக்கில் கட்டிப்பிடித்து எச்சில் பரிமாற்றம் செய்துவந்த காதல் பறவைகள் தியோட்டர்ல தனியா இருக்குமா? இல்லது அப்பிடி இருந்தாத்தான் என்ன பிரியோசனம்?

கோனர் சீட் கொண்டாட்டங்கள் இல்லையெண்டால் பல தியோட்டர்கள்பாடு திண்டாட்டம் தான்.

இந்த உண்மை என்னைப்போன்ற ஞானிகளுக்கு மட்டுமே புரியும்.


வங்கி பவுடிகள் வேறலெவல்.

வீட்ட இருந்துகொண்டுவந்த வங்கிப்புத்தகம் சந்தையில வியாபரம் செய்து கொண்டுவந்த காசு இரெண்டையும் வெறுங்கையால வாங்குறியள் பிறகு  எதுக்கு வாசலில் கைகழுவச்சொல்லி.3அடி இடைவெளிவிட்டு நிண்டு உங்களைச் சுத்தி பொலித்தீன் கட்டி வச்சிருக்கிறியள்?முறைப்படி பார்த்தால் பணத்தையும் புத்தகத்தையும்தான் நீங்கள் கழுவிவாங்கோணும்.


இதுகளைவிட உச்சகட்ட மனநோய் ஒண்டு இருக்கு...

சும்மா இருமினாலே கொரோணாவோ எண்டு பயந்தபடி தினம்தினம் பீதியில இருக்கிறவையின்ர தொகையும் கூடிப் போச்சு.உந்தக்கோதாரிகள் தாங்களும் பயந்து எங்களையும் பயப்பிடுத்திப்போடுங்கள்.கொரோணாவை விட கொடிய கிருமிகள் உதுகள்தான்.மழைகாலம் எண்டாலே பொதுவா குளிருக்கு இருமல்,தும்மல், சளி எல்லாம் வாரது சகஜம் தானே.அதுவிளங்காமல் உதுகள் பயத்துசாகுதுகள்.


இதன்மூலம் சண்முகத்துக்கு இப்ப என்ன சொல்லவாரன் எண்டால்...

கொவிட்டின் மறைமுகமான தாக்கமாக ஏராளம் மனநோய்கள் உருவாகியபடி இருக்கு பாத்து பக்குவமா இருங்கோ....

கருத்துரையிடுக

0 கருத்துகள்